நன்கொடை பெயரில் வசூலிக்கும் பணம் தீவிரவாதத்திற்குப் பயன்படுவதைத் தடுக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு நிதி திரட்டும் தொண்டு நிறுவனங்களை கருத்தில் கொண்டு நன்கொடை பெறும் அமைப்புகளுக்கு சில வழிகாட்டல்களை தெரிவிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருக்கிறார். பாகிஸ்தானுடன் தொடர்புடைய சில தொண்டு அமைப்புகள் கோவிட் பாதிப்புகளை குறிப்பிட்டு பெருமளவில் நன்கொடைகளைக் குவித்துவருவதாகவும், இதில் பெரும் பகுதி பணம் பாகிஸ்தான் ராணுவம் அல்லது தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பலவகையான நிதி மோசடிகளுக்கும் இது வழிவகுப்பதால் மத்திய அரசு விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.