திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரவு செலவுக்காக 2022 -23 நிதி ஆண்டிற்கு 3096 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, 2021-22 நிதியாண்டில் 3000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது என்றார். வரும் நிதியாண்டில் 3 ஆயிரத்து 96 கோடி ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக கூறினார்.
திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச டிக்கெட் எண்ணிக்கையை படிப்படியாக அதிகப்படுத்தவும், திருமலையில் அனைத்து பகுதிகளிலும் அன்னதானம் வினியோகிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சுப்பாரெட்டி தெரிவித்தார்.