உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டதாக ரஷ்யா ஏமாற்றுவதாகவும், எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கக் கூடும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் மாளிகைச் செய்தித் துறைச் செயலர் ஜென் சாகி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இன்னும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
டான்பாஸ் புதைகுழி பற்றிய அறிக்கை போன்றவை உக்ரைனுக்குள் ஊடுருவுவதற்கான சாக்குப் போக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டதாக ரஷ்யா கூறுவதை அமெரிக்கா நம்பவில்லை என்றும், அச்சுறுத்தும் வகையில் எல்லையில் ரஷ்யப் படைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.