கடற்படையின் முன்னாள் துணைத் தலைவர் அசோக் குமார், நாட்டின் முதல் தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடல்சார் அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், கடலோர பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கும் பணியையும் அசோக்குமார் கவனிப்பார். தனது பணிகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம், அசோக்குமார் அறிக்கை அளிப்பார்.
கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து கடல்சார் பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்க அன்றைய அமைச்சரவை முன்மொழிந்தது. இறுதியாக கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.