உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழை மக்களுக்கு இலவச ரேசன் பொருட்களுடன், ஒரு கிலோ நெய் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஆண்டுக்கு இரண்டு எரிவாயு சிலிண்டர்கள், கடுகுL எண்ணெயும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.
மாநிலத்தின் அரசு துறைகளில் 11 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிட்ட அகிலேஷ் யாதவ், தங்களது கட்சி ஆட்சி அமைத்தால் இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உறுதி அளித்தார்.