ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுக்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றன.
கர்நாடகாவின் உடுப்பியிலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர தடை விதிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
தங்களை ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு மாணவிகள் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அனைத்து தரப்பு மாணவர்களும் மத அடையாளம் கொண்ட ஆடைகளை அணிந்து வர இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடைபெறவுள்ளது.