உக்ரைன் மீது நாளை 16 ஆம் தேதி ரஷ்யா போர்தொடுத்து தாக்குதல் நடத்த இருப்பதாக உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஜெலன்ஸ்கி தமது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இதனால் உக்ரைன் ரஷ்யா எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது .சுமார் ஒருலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா எல்லையில் குவித்துள்ளது. இது குறித்த சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில் ரஷ்யா போர்ப் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது. பயிற்சி முடித்து வீரர்கள் ரஷ்யா திரும்பி விடுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட போதும் போர் அச்சம் நீடிக்கிறது.
உக்ரைன் அதிபரின் முகநூல் கருத்து குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் உக்ரைன் மீது நாளை படையெடுப்பு செய்ய புதின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதில் நம்பிக்கை இல்லை என்றும்,அதே நேரத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி தாக்குதல் தொடுக்கக் கூடிய நிலையில் புதின் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.