ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பனிக்கட்டியால் ஆன தாஜ்மகாலை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
குல்மார்க்கில் அமைந்துள்ள இந்த பனிக்கட்டி தாஜ்மகால் 16அடி உயரமாகும். 4 சிற்பிகள் 17 நாட்கள் பணி புரிந்து இதனை உருவாக்கி உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பனி மற்றும் பனியால் செய்யப்பட்ட மேசைகளில் சூடான உணவு மற்றும் காபியினை அருந்தி மகிழ்கின்றனர்.