சென்னையில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ஒரு கோடியே 44 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, நடத்தை விதிகளை தீவிரமாக கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து அரசியல் கட்சியினர், பொதுமக்களின் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.