கச்சா பாமாயிலின் இறக்குமதி வரியை 8 புள்ளி 25 சதவிகிதத்தில் இருந்து 5 புள்ளி 5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த வரி குறைப்பு நாட்டில் பாமாயில் விலையினை கட்டுப்படுத்தும் என்றும் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரியையும் மத்திய அரசு 7 புள்ளி 5 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்துள்ளது.
இந்த வரிக் குறைப்புகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் மறைமுக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.