சட்டிஸ்கர் மாநிலம் ஜக்தலபுர் பகுதியில் காவல் துறையினர் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் ஒரு துணை கமாண்டன்ட் அதிகாரியான சாந்தி பூஷண் என்பவர் உயிர் இழந்தார்.
மேலும் சில துணை ராணுவப் படையினர் காயம் அடைந்தனர். சாலை பாதுகாப்புக்காக ரோந்துப் பணி மேற்கொள்ள துணை ராணுவப்படையினர் வாகனத்தில் சென்ற போது பயங்கர ஆயுதங்களுடன் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் துணைராணுவத்தினரைத் தாக்கி 47 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து மாவோயிஸ்ட்டுகள் தப்பிச்சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் படைகள் குவிக்கப்பட்டு தப்பியோடிய மாவோயிஸ்ட்டுகளைத் தேடி வருகின்றனர்