சென்னை அடையாறு பகுதியில் மாட்டுவண்டி மீது கார் மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தார்.
காந்தி நகரில் சாலையோரம் மாட்டு வண்டியில் பழ வியாபாரம் செய்துகொண்டிருந்த வியாபாரியின் மீது பென்ஸ் ரக சொகுசுக் கார் ஒன்று பலமாக மோதி, எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதி நின்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட பழவியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 4 இளைஞர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.