ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படாது என குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, கர்நாடகாவின் சில கல்வி நிறுவனங்களில் நிலவிய சீருடை தொடர்பான பிரச்சனை உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு, வழிமுறைகள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்தியா பற்றி அறிந்தவர்கள் அந்த உண்மைகளை நன்று அறிவார்கள் என்றும் அரிந்தம் பக்சி குறிப்பிட்டுள்ளார்.