சென்னையில் நட்சத்திர ஓட்டலில் வழக்கறிஞர் ஒருவர் விடிய விடிய மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்த பொருட்களை உடைத்தது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
தேனாம்பேட்டையில் உள்ள கோர்ட்யார்டு ஓட்டலில் நேற்று அறை எடுத்து தங்கிய டைட்டஸ் என்ற வழக்கறிஞர், அதிகாலை வரை மது அருந்திவிட்டு அறையை காலி செய்ய முயன்றுள்ளார்.
அப்போது அறை வாடகை, மதுபானத்திற்கான பணத்தை ஓட்டல் ஊழியர்கள் கேட்டதை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் அங்கிருந்த பொருட்களை தள்ளிவிட்டு உடைத்துள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஓட்டலுக்கு வெளியே வந்து அங்கிருந்த கார்களையும் அவர் சேதப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து வழக்கறிஞரை கைது செய்து விசாரித்த போலீசார், அவர் பல இடங்களில் இதேபோல் ஏமாற்றி பிரச்சினையில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டவர் என கண்டறிந்தனர்.