நேரு நினைத்திருந்தால், 1947-ல் சுதந்திரம் கிடைத்த போதே, போர்ச்சுக்கீசிய ஆளுகையில் இருந்து கோவாவை விடுவித்திருக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வருகிற 14ஆம் தேதி, கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனை ஒட்டி, அம்மாநிலத்தின் மப்பூசா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, நேரு நினைத்திருந்தால் நாடு சுதந்திரம் அடைந்த சில மணி நேரங்களிலேயே கோவாவை விடுவித்திருக்கலாம் எனவும், ஆனால், போர்ச்சுக்கீசிய ஆளுகையில் இருந்து கோவாவை விடுக்க, சுதந்திரத்திற்கு பிறகு 15 ஆண்டுகள் ஆனது எனவும், இது பலருக்கும் தெரியாது எனவும் கூறினார்.
கோவா இளைஞர்களின் அரசியல் கலாசாரம், விருப்பங்களை காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை எனவும், கோவா மீது காங்கிரசுக்கு எப்போதும் பகை உணர்வு உண்டு எனவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.