பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், நேரடி அந்நிய முதலீடும் அந்நியச் செலாவணிக் கையிருப்பும் அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் பேசிய அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் பட்ஜெட் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பிஎம் கதி சக்தித் திட்டத்தின் மூலம் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இதுவரை இல்லா வகையில் செலவிடப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
வேளாண்மையில் டிரோன்களின் பயன்பாட்டால் உரங்கள் பூச்சிக்கொல்லிகளைத் திறமையாகப் பயன்படுத்தவும், பயிரிடும் பரப்பு, விளைச்சல் ஆகியவற்றை மதிப்பிடவும் முடியும் எனக் குறிப்பிட்டார்.