உலகில் அதிக தேடப்படும் அழிந்து போன 25 உயிரினங்களின் பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
டெக்சாஸை தளமாகக் கொண்ட அமைப்பான Re:wild என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளனர். இந்தப் பட்டியலில் பிளாங்கோ பிளைன்ட் எனப்படும் கண்களற்ற சாலமன் மீன்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த 1951ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வகை மீன்கள் அரிதாகவே தென்பட்டதாகக் கூறும் விஞ்ஞானிகள் நீரின் வெகு ஆழத்தில் பிளைன்ட் சாலமன்கள் வாழ்வதால் அவற்றிற்கு கண்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த நடனமாடும் சிலந்திப் பூச்சியும், கொலம்பியாவின் பூனை மீன்களும் இந்தப் பட்டியலில் இடம்
பெற்றுள்ளன.