வருகிற 16ஆம் தேதி முதல் ஏழுமலையான் பக்தர்களுக்கு கூடுதலாக மேலும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நேரடியாக வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவஹர்ரெட்டி, ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்வது பற்றி இம்மாதம் நடைபெறவிருக்கும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.