1975 ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவின் 129 செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 46 ஆண்டுகளில் 36 நாடுகளுடைய 342 செயற்கைகோள்களையும் இஸ்ரோ விண்ணில் ஏவி இருப்பதாக கூறினார்.
இதற்கிடையே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வருகிற 14-ம் தேதி காலை 5:59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. - சி52 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.