சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 2ஆம் கட்ட பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் நேரடி முறையில் நடைபெறும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
முதல் கட்ட பருவத் தேர்வுகள் நவம்பர், டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில் 2ஆம் கட்ட தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆலோசனை மேற்கொண்டது.
தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் நேரடி முறையில் பருவத் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.