விண்வெளியில் 'இறந்த' நட்சத்திரத்தின் கடைசித் தருணங்களை நாசா விஞ்ஞானிகள் முதன்முறையாக படம் பிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து 44 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள G29-38 என்று அழைக்கப்படும் நட்சத்திரத்தை நாசா விஞ்ஞானிகள் சந்திரா ஆய்வகம் மூலம் ஆய்வு செய்து வந்தனர்.
அப்போது அந்த நட்சத்திரத்தின் மையப் பகுதியில் மற்ற விண்கற்கள் மோதியதைக் கண்டுபிடித்தனர். மோதிய வேகத்தில் G29-38 நட்சத்திரத்தில் 18 லட்சம் டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் உண்டானதால் அந்த நட்சத்திரம் இறந்து போனதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.