ஹிஜாப் விவகாரத்தில் பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க வேண்டாம் என்று நோபல் விருது பெற்ற மலாலா யூசுப் இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண்கள் உடையை முன் வைத்து அவர்களை கல்வி கற்க விடாமல் தடுப்பது அச்சுறுத்துவதாக இருப்பதாக மலாலா கூறியுள்ளார். பெண்களின் ஆடை குறைந்தாலோ கூடினாலோ அது பிரச்சினையாகி விடுகிறது என்றும் மலாலா தெரிவித்தார்.
முஸ்லீம் பெண்களை விளிம்புக்குத் தள்ள வேண்டாம் என்றும் இந்திய தலைவர்களுக்கு மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்