ஒடிசாவில் குழந்தைகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்த மருத்துவமனை ஊழியர்கள் இரண்டு பேர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள நயாகர் டவுணில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படும் சம்பவம் அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தொடர்புடைய செவிலியர் கமலா தேவி உதவியாளர் புஷ்பாஞ்சலி மற்றும் தொண்டு அமைப்பின் ஊழியர் பானுமதி நாயக் ஆகிய மூன்று பெண்கள் சிக்கியுள்ளனர்.
காணாமல் போன குழந்தையும் மீட்கப்பட்டது. குழந்தை கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்