கோவிலையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையை செய்யாமல் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் நிலத்தை குத்தகைக்கு எடுத்த மயிலாப்பூர் கிளப், 3 கோடி ரூபாய் அளவிற்கு வாடகை பாக்கி வைத்திருப்பதாக கோவில் இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.
இதன் விசாரணையில், முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணைபோவது அறநிலையத்துறை சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், கோவிலுக்கு தானமாக கொடுத்த நன்கொடையாளர்களிடம் கொடுத்த உத்தரவாதத்தையும் மீறும் செயல் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, வாடகை பாக்கியை வசூலிக்க அனுப்பப்பட்ட நோட்டீஸ் சரியானது என்பதால், வாடகையை செலுத்த மயிலாப்பூர் கிளப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.