ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசிக்குக் குண்டு துளைக்காத காரும், இசட் பிரிவு பாதுகாப்பும் வழங்க அரசு முன்வந்தும் அவர் ஏற்க மறுத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஓவைசியின் கார் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அமித் ஷா, தனது பயணம் பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஓவைசி முன்கூட்டித் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவரைக் கைது செய்து 2 கைத்துப்பாக்கிகள், ஒரு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளதாகவும், தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஓவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசும், டெல்லி தெலங்கானா அரசுகளும் முன்வந்தும் அவற்றை ஏற்க மறுத்துவிட்டதாக அமித் ஷா தெரிவித்தார்.