கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் பஜார் லைன் பகுதியில் லட்சுமி என்பவர் கூலி வேலை செய்து வந்தார். சம்பத்தன்று காலை லட்சுமியின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்த போது லட்சுமி உட்பட அவரது மகன்கள் மூன்று பேரும் , உறவுக்காரச் சிறுவன் ஒருவன் என மொத்தம் ஐந்து பேர் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது.
லட்சுமியின் கணவர் வெளியூர் சென்று விட்டதாக சொல்லப்படும் நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து கிருஷ்ணராஜ சாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.