செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

216 அடி உயர ராமானுஜர் சிலை திறப்பு சமத்துவத்திற்கான சிலையை திறந்த பிரதமர்.!

Feb 05, 2022 09:52:56 PM

தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்ட 216 அடி உயர பிராம்மாண்ட ராமானுஜர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உள்ளதாக குறிப்பிட்டார்.

வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் 'சமத்துவத்திற்கான சிலை' என்ற பெயரில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள பீடத்தின் மீது ராமானுஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்து 800 டன் எடையுள்ள இந்த சிலையை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தாமரை மலர் மேல் ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை கட்டமைக்க 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. பீடத்தில் 54 தாமரை இதழ்கள், அவற்றின் கீழ் 36 யானை சிற்பங்கள், 18 சக்கரங்கள், சிலைக்கு அருகில் ஏற 108 படிகள் ஆகியவை உள்ளன.

இந்நிலையில், சிலை திறப்பு விழாவை ஒட்டி நடைபெற்ற யாகசாலை பூஜையில் பங்கேற்ற பிரதமர், திருநாமம் சூடி, வேத மந்திரங்களை உச்சரித்து யாகத்தில் பங்கேற்றார்

இதனை தொடர்ந்து, ஆசிரமத்தில் உள்ள திவ்ய தேச கோவில்களில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.

பிரம்மாண்டமாக நிறுவப்பட்ட ராமானுஜரின் சிலைக்கு கீழ் இருந்த அவரது சிறிய அளவிலான சிலையை பூஜித்த பிரதமர், சிலை திறப்பிற்கு அடையாளமாக கல்வெட்டை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சமயப்பணிகளில் தலை சிறந்த ராமானுஜர் வடமொழிக்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளித்ததாக குறிப்பிட்டார். இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அடையாளமாக திகழ்ந்த ராமானுஜரின் போதனைகள் வடக்கு முதல் தெற்கு வரை அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சமத்துவத்தின் உண்மையான பாதுகாவலராக திகழ்ந்த ராமானுஜர், கோவில்களுக்குள் பிற்படுத்தப்பட்டோரும் நுழைவதை சாத்தியமாக்கியவர் என்றும் பிரதமர் தனது உரையில் புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் முப்பரிமாண காட்சியமைப்புகள் கொண்ட கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Advertisement
ஏலக்காய் விலை திடீர் உயர்வு..! காரணம் என்ன?
274 நாள்களில் 12 நாடுகள் வழியே 46,239 கிலோமீட்டர் பயணித்த நீண்டதூர பயண ஆர்வலர்..!
தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டி குழந்தைகள், செல்லப் பிராணிகளுடன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்..!
மதுரை சாலையில் மனித தலை கிடந்த விவகாரம்.. போலீசார் விசாரணையில் தெரிந்த நாயால் நடந்த ட்விஸ்ட்..!
பந்தயம் போட்டு இரவுநேரத்தில் சீறிப்பாயும் ஆட்டோக்கள் - உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது போலீஸில் புகார்.!
கல்லூரி மாணவரை தாக்கி வழிப்பறி - 5 பேர் கைது.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

Advertisement
Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

உயிர் பயத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே? அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு கள ஆய்வுக்கு அதிகாரிகள் ஏன் போகலை?

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்


Advertisement