ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜஸ்டின் லேங்கர் விலகியுள்ளார்.
2018ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நட்சத்திர வீரர்கள் ஸ்மித், வார்னருக்கு ஒராண்டு தடை விதிக்கப்பட்ட போது ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. அப்போது பயிற்சியாளராக பொறுப்பேற்ற லேங்கர், அணியை சரிவில் இருந்து மீட்டு, மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக மாற்றினார்.
அதே சமயம் அவரது கண்டிப்பான அனுகுமுறைகள் குறித்து வீரர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர். நேற்று அவரது ஒப்பந்த காலத்தை நீட்டிக்க ஆஸி கிரிக்கெட் வாரியம் நடத்திய பேச்ஆஸி., அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து லேங்கர் விலகல்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக லேங்கர் அறிவித்துள்ளார்.