கேரளாவில் நாகப்பாம்பு கடித்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ், இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 31-ந் தேதி கோட்டயம் பகுதியில் நாகப்பாம்பை பிடித்து சாக்குப் பையில் போடும்போது சுரேஷை அந்த பாம்பு கடித்தது.
இதனையடுத்து, சுய நினைவை இழந்து கவலைக்கிடமான நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், வெண்டிலேட்டர் இல்லாமல் தாமாகவே சுரேஷ் மூச்சுவிடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.