நாட்டில் நடக்கும் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை என்றும், ஒவ்வொரு மனிதனையும் பலாத்காரம் செய்பவர் என்றும் கூறுவது சரியல்ல என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
குடும்ப வன்முறைச் சட்டப் பிரிவின்படி மனைவியின் விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்திக் கணவன் உறவுகொள்வது பலாத்காரமாகக் கருதப்படாது எனக் கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பினய் விஸ்வம் கேட்டுக்கொண்டார்.
அதற்கு விளக்கமளித்த பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒவ்வொரு மனிதனையும் பலாத்காரம் செய்பவர் எனக் கூறுவது சரியல்ல எனத் தெரிவித்தார். எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்தியக் குற்றவியல் நீதி முறையை மறு ஆய்வு செய்ய உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.