டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்தது.
டெல்லியில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக காசியாபாத், நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி, பரவலாக மழை பெய்த நிலையில் குறைந்த பட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்றும் நாளையும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், டெல்லியின் காற்றின் தரம் மோசமான நிலையில் நீட்டிக்கிறது. அங்கு காற்றின் தரக்குறியீடு 318 ஆக உள்ளது.