ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களும், மாணவிகளும் ஒருவரை ஒருவர் சந்திக்காத வண்ணம் தனித்தனி வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்கள், இதுவரை பெண்களின் உயர்கல்வி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள வெப்பமான மாகாணங்களில் பல மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு நுழைவாயில் வழியாக மாணவர்களும், மாணவிகளும் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் தனித்தனி வகுப்பறைகளில் அமரவக்கப்பட்டதுடன், வகுப்பு நேரங்களும் சுழற்சி முறையில் அமைக்கப்பட்டுள்ளன.