லண்டன் ஹுத்ரோ விமான நிலையத்தில் பலத்த காற்று காரணமாக தரையிறங்கும் போது கடுமையாக தடுமாறிய விமானத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
வட ஐரோப்பாவில் Malik புயல் காரணமாக மணிக்கு 145 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசுகிறது. இந்நிலையில், ஆபர்டீன்-ல் இருந்து வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் பின் டயர்களின் ஒரு பகுதி மட்டும் ரன்வேயை தொட்டது. விமானத்தை சரியாக தரை இறக்க முடியாததால் விமானி சாமர்த்தியமாக விமானத்தை அப்படியே டேக் ஆப் செய்தார்.
இதில் விமானத்தின் பின்பகுதி லேசாக ரன்வேயில் உரசியதால் புகை எழுந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் விமானி வெற்றிகரமாக விமானத்தை தரை இறக்கினார்.