ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டும் போது மண் சரிவு ஏற்பட்டதில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர்.
4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணி முடிந்த பிறகே உயிரிழப்பின் சரியான எண்ணிக்கை தெரிய வரும் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்