வரும் நிதியாண்டிற்காக மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு தொழில் கூட்டமைப்பினர், சிறு குறு தொழில் சங்கத்தினர் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் சென்னை மண்டல தலைவர் கன்னியப்பன் தெரிவித்துள்ளார்.
மனநல ஆலோசனை உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மருத்துவப் பிரிவு தலைவர் பாலாஜி கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் வெளியான, டிஜிட்டல் கரன்சி குறித்த அறிவிப்பு பற்றியும், இ-பேங்கிங் உள்ளிட்டவை குறித்தும் தென்னிந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் வணிக வரிப்பிரிவு தலைவர் ஸ்ரீராம் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் புதிய தொழில் முனைவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்ட்டுள்ளதாக தென்னிந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தொடக்க நிலை தொழில் நிறுவனங்கள் பிரிவு தலைவர் கோபி கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.