நாட்டில் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு இந்தியாவை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக மாற்ற 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கட்டமைப்பை வலுப்படுத்த சூரிய சக்தி உற்பத்தி பேனல்கள் உள்ளிட்ட துறைகளிலும் முகேஷ் அம்பானி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹைட்ரஜன் மூலம் மின்சார உற்பத்தி செய்வதில் இந்தியாவை முன்னோடி நாடாக மாற்றும் வகையில் இத்துறையில் முகேஷ் அம்பானி வரும் நாட்களில் அதிகளவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளதாக முகேஷ் அம்பானி ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.