பன்னாட்டு அழைப்புகள், சேட்டிலைட் தொலைபேசி உரையாடல், கான்பரன்ஸ் அழைப்புகள், குறுஞ்சேதிகள் ஆகிய விவரங்களை இரண்டு ஆண்டுகளுக்குச் சேமித்து வைப்பதை அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.
இத்தகைய விவரங்களை ஓராண்டுக் காலத்துக்குச் சேமித்து வைத்திருக்க ஏற்கெனவே உள்ள விதிகளில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதை இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவதற்கான திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதேபோல் சேட்டிலைட் அழைப்புகள், தரவு சேவைகள் வழங்க பிஎஸ்என்எல்லுக்கு உரிமம் வழங்கியும் புதிய திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.