புதுச்சேரியில் காந்தியடிகளின் 75-வது நினைவு தினத்தையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில், துணை நிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது காந்தியடிகளின் நினைவாக பாரதியார் கலைக்கூடத்தை சேர்ந்த கலைஞர்கள் தேசபக்திப்பாடல்கள் பாடியதுடன் மும்மத பிரார்த்தனை மற்றும் அவருக்கு மிக பிடித்தமான ராட்டை மூலம் கைத்தறி நூல் சுற்றும் நிகழ்வையும் நடத்தினர். இதேபோல் காங்கிரஸ் கட்சியினரும், சுதந்திர போராட்ட தியாகிகளும் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.