குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீர்குழைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக பல்வேறு போட்டியாளர்களுக்கு பணம் வழங்கி தொடருக்கு எதிரான செயல்களில் ஈடுபட உத்தரவிட்டுள்ளதாகவும், சீனா குற்றம்சாட்டி உள்ளது.
வரும் 4ஆம் தேதி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீனாவில் தொடங்க உள்ள நிலையில் போட்டியை சீர்குழைக்கும் திட்டத்தில் அமெரிக்கா முழுவீச்சில் செயல்படுவதாக சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் சீனா டெய்லி ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம் சீனாவின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. உய்குர் இன மக்கள் துன்புறுத்தப்படுவதாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரை ராஜாங்க ரீதியில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துள்ளன.