சென்னை காவல்துறையின் முழு விபரங்கள் மற்றும் செயல்பாடுகள் அடங்கிய பிரத்தியேக அதிகாரபூர்வ வலைதளத்தை உருவாக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக பெறப்பட்ட கோரிக்கை மனுவை ஆய்வு செய்த தமிழ்நாடு தகவல் ஆணையம், தற்போதுள்ள சென்னை காவல்துறையின் வலைதளம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 4-ன் கீழ் செயல்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
எனவே அதிகாரப்பூர்வ வலைதளத்தை உருவாக்கி, அதில் சென்னை காவல்துறையின் அதிகாரத்தின் கீழ் வரும் காவல் நிலையங்கள் மற்றும் பொறுப்பிலுள்ள அதிகாதிகள் குறித்த முழு விபரம், மின்னஞ்சல் முகவரி, காவல் நிலையங்களின் இருப்பிடம் குறித்த மேப், போக்குவரத்து காவல் மூலம் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த விபரம் உள்ளிட்டவை அடங்கியிருக்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.