ஆப்கானிஸ்தானில் பட்டினி மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மக்கள் தங்களது கிட்னிகளை விற்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு மாகாணமாக ஹெரத்தில் பட்டினிச் சாவு, வறுமையை தவிர்க்க கிட்னிகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதாகவும், கிட்னி விற்பவர்களில் பெண்களும், குழந்தைகளும் பெரும் பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் அங்கு மோசமான சூழல் நிலவுகிறது. சர்வதேச அளவிலான ஆப்கானின் நிதி மற்றும் முதலீடுகள் முடக்கப்பட்டதே மோசமான சூழல்நிலைக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.