ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட 7 இந்திய மாலுமிகளை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக கொடி பொருத்திய Rwabee சரக்கு கப்பலில் பயணித்த 7 இந்திய மாலுமிகளை பிணையக் கைதிகளாக கடந்த 2ஆம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிடித்தனர்.
இந்நிலையில் 7 பேரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், அவர்களை குடும்பத்தினருடன் பேச வைக்க கடத்தல்காரர்கள் அனுமதிக்கவில்லை என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விரைவில் 7 இந்தியர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.