இந்தியாவின் ஜனநாயகத்திற்கு யாருடைய நற்சான்றும் தேவையில்லை என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்காவின் அமைப்புகள் ஆய்வு மேற்கொண்டு அதில் நான்கு பிரதிநிதிகளுடன் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்த போது இந்தியாவில் மனித உரிமைகள் விவகாரம் கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் அரசியல் சட்ட அமைப்பை பாதுகாக்க வலியுறுத்தும் அந்நிய அமைப்பினரின் கருத்துகள் மிகையானவை என்றும் அபத்தமானவை என்றும் பதிலடி கொடுத்துள்ளது.