அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், நவநீதகிருஷ்ணன் மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.