கனடா செல்லும் இந்தியர்களுக்கு விதித்திருந்த கடுமையான கொரோனா சோதனை விதிமுறைகளை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து கனடாவுக்குச் செல்வோர் புறப்படுவதற்கு 18 மணி நேரத்துக்குள் டெல்லி விமான நிலையத்தில் உள்ள ஜீன்ஸ்ட்ரிங்ஸ் என்னும் ஆய்வகத்தில் கொரோனா சோதனை செய்து சான்று பெற்றிருக்க வேண்டும் என முன்பு விதிமுறை இருந்தது. இதனால் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தோர் டெல்லிக்குச் சென்று அலைய வேண்டியிருந்தது. இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து விமானம் மாறிக் கனடாவுக்குச் செல்வோர் அந்த மூன்றாவது நாட்டில் மீண்டும் சோதித்து கொரோனா சான்று பெற வேண்டும் எனவும் விதிமுறை இருந்தது.
இந்த விதிமுறைகளை நீக்கியுள்ள கனடா அரசு ஐசிஎம்ஆர் அங்கீகாரம் பெற்ற எந்தவொரு ஆய்வகத்திலும் சோதித்துச் சான்றுபெறலாம் என அறிவித்துள்ளது.