டெல்லியில் வார இறுதி ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்றவை 50 சதவீத நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களும் 50 சதவீதப் பணியாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமணங்களுக்கு வரும் விருந்தினர் எண்ணிக்கையும் 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இரவு நேர ஊரடங்கு தொடரும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் கல்லூரிகள் திறக்கவும் தடை நீடிக்கிறது.