சென்னையில் ஆட்டோ ஓட்டும் தொழிலை நேர்மையாகவும் புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் முன்மாதிரியாக விளங்கிவரும் அண்ணாதுரை என்பவரை நேரில் அழைத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.
குடும்ப வறுமை காரணமாக 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் அண்ணாதுரை, தனது ஆட்டோவில் wi-fi,செய்தித்தாள்கள், வார இதழ்கள், சிறிய குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.