தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில், 73 இடங்கள் நிரம்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில், மாற்றுத்திறனாளிகள் 54 பேரும், விளையாட்டு பிரிவில் 7 பேர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 10 பேர், என மொத்தம் 71 பேர், அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 272 இடங்கள் இருந்தபோதும், வெறும் 54 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். மீதம் இருக்கக்கூடிய இடங்கள் அனைத்தும் பொதுப் பிரிவில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.