சென்னை அடுத்த கொளத்தூரில் அதிக நேரம் செல்போனில் விளையாடக் கூடாது என தாயார் கண்டித்ததாக கூறப்படும் நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்த கணவரை இழந்த அம்சா என்ற பெண்மணி, செல்போனில் கேம் விளையாடுவதை தவிர்க்க வேண்டுமென மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் மாணவி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.