மத்திய பணிக்கு அழைக்கப்படும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் எண்ணிக்கை மாநில அரசுகளுடன் ஆலோசித்தே முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் தெரிவித்துள்ள மத்திய அரசு, கொள்கை உருவாக்கம், திட்டம் அமலாக்கப் பணிகளுக்காக மத்திய அரசுக்கு அதிகாரிகள் தேவைப்படுகின்றனர் என்றும் போதிய அளவில் அதிகாரிகள் இல்லாதது மத்திய அரசின் நிர்வாகத்தைப் பாதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலை மாற்றப்படுவதையே ஐஏஎஸ் விதிமுறை திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.